கந்தளாயில் டிப்பர் வாகனம் குடை சாய்ந்ததில் ஒருவர் காயம்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை, கந்தளாய் பகுதியில் இன்று இடம்பெற்றுள்ள விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த பகுதியில் வேகமாக சென்ற டிப்பர் வாகனமொன்று குடை சாய்ந்து பாதையை விட்டு விலகியுள்ளது.

இதனால் காயத்திற்குள்ளான சாரதி கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கந்தளாய், அக்போபுர பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய சாரதியொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers