பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து உயிருக்குப் போராடும் யானையை மீட்கும் நடவடிக்கை

Report Print Theesan in சமூகம்

வவுனியா - வடக்கு கனகராஜன்குளம், பெரியகுளம் பகுதியிலுள்ள பாவனையற்ற கிணற்றில் வீழ்ந்து உயிருக்குப் போராடும் யானைக்குட்டியை மீட்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வவுனியா கனகராஜன்குளம் பெரியகுளம் பகுதியிலுள்ள ஆயுள் வேத வைத்தியசாலை அமையும் பகுதியிலுள்ள பாவனையற்ற கிணற்றில் நேற்று இரவு யானை குட்டி ஒன்று தவறி வீழ்ந்துள்ளது.

இதையடுத்து, அருகிலிருந்தவர்களின் உதவியுடன் கிணற்றிலிருந்த பெருமளவு தண்ணீர் வெளியே இறைக்கப்பட்டு ஜே.சி.பி, பாரம்தூக்கியின் உதவியுடன் யானைக்குட்டியை மீட்கும் நடவடிக்கையை இன்று காலை முதல் கனகராஜன்குளம் பொலிஸார், வவுனியா, கிளிநொச்சியை சேர்ந்த வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள், கிராம மக்கள் ஒன்றிணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers