இலங்கைக்கான இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் சைக்கிள் ஓட்டப் போட்டி

Report Print Sumi in சமூகம்

உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 03ஆம் திகதி சைக்கிள் ஓட்டப் போட்டி நடைபெற உள்ளது.

மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தையொட்டி இலங்கைக்கான இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் சைக்கிள் ஓட்டப் போட்டி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் யாழ்.அரியாலைசாந்தி சன சமூக நிலையத்தில் ஆரம்பமாகி யாழ்.வைத்தியசாலை வீதிக்கு முன்பாக உள்ள மகாத்மா காந்தி உருவச்சிலைக்கு அண்மையில் சைக்கிள் ஓட்டப் போட்டி நிறைவடைய உள்ளது.

இதில் 100 பேர் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Latest Offers