பயங்கரவாதி சஹ்ரானினால் தாக்குதலுக்குள்ளான முஸ்லிம் நபர் வெளியிட்ட முக்கிய தகவல்கள்

Report Print Vethu Vethu in சமூகம்

தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹசீமுடன் இணைந்து தனக்கு தாக்குதல் மேற்கொண்ட 4 பேர் காத்தான்குடியில் சுதந்திரமாக திரிவதாக முஸ்லிம் நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சஹ்ரான் உட்பட குழுவினரால் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த காத்தான்குடி முஹமது முசாபீர் என்பவரே இந்த விடயத்தை வெளியிட்டுள்ளார்.

தங்கள் தர்மத்திற்காக மக்களை கொலை செய்யும் ஜிஹாத் போராட்டத்திற்கமைய 2017ஆம் ஆண்டு 03ஆம் மாதம் 10ஆம் திகதி காத்தான்குடி ஆலியா சந்தியில் நடத்தப்பட்ட தாக்குதலில் முசாபீர் படுகாயமடைந்துள்ளார்.

சஹ்ரான் ஹசீம் உட்பட பயங்கரவாதிகள் காத்தான்குடி ஆலியா சந்தியில் முஸ்லிம்களின் கூட்டம் ஒன்றிற்கு வாள் உட்பட பொருட்களுடன் நுழைந்து மேற்கொண்ட கொடூர தாக்குதல் வீடியோ ஒன்றை தேரர் ஒருவர் அண்மையில் ஊடகங்களில் வெளியிட்டிருந்தார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் வெட்டுக் காயத்துடன் தப்பிச் சென்ற மொஹமட் முசாபீர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

“2017ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் ஜிஹாத் தீவிரவாதத்தை வியாபிப்பதற்கு சஹ்ரான் பாரிய முயற்சிகளை மேற்கொண்டார். அவருக்கு எதிராக இலங்கையின் சுன்னி முஸ்லிம்களினால் பாரிய எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

அதே வகையில் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் திகதி காத்தான்குடி ஆலியா சந்தியில் சஹ்ரானின் பயங்கரவாத குழுவுக்கு எதிராக இந்த முஸ்லிம் அமைப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தது.

நானும் எனது தாத்தாவும், அந்த கூட்டத்தில் கலந்து கொண்டோம். அந்த சந்தர்ப்பத்தில் இளநீர் நிறத்தில் ஆடை அணிந்து வாள் உட்பட ஆயுதங்களுடன் சஹ்ரான் உட்பட குழுவினர் அவ்விடத்திற்கு புகுந்தனர். அத்துடன் அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டனர். எனது மைத்துனர் மீது முதலில் தாக்குதல் மேற்கொண்டு என்னை சுற்றி வளைத்தனர்.

அல்லாவின் நாமத்தில் ஜிஹாத் போராட்டத்தை ஆரம்பித்து விட்டதாக கூறி அல்லாஹு அக்பர் என கூச்சலிட்டு சஹ்ரான் தனது கையில் இருந்த வாளில் என்னை தாக்க ஆரம்பித்தார்.

சஹ்ரானின் சகோதரர்கள், சாய்ந்தமருந்தில் உயிரிழந்த ரில்வான் மற்றும் மேலும் இருவரான நியாஸ் மற்றும் அஜீவத் என்பவர்கள் ஜிஹாத் வென்றதென கூறிக்கொண்டு என்னை தொடர்ந்து தாக்கினார்கள். சஹ்ரானே என்னை முதலில் தாக்கினார்.

அவர் மிகவும் சிரித்த முகத்துடனேயே என்னை தாக்கினார். நான் பாரிய போராட்டத்தின் பின்னரே அங்கிருந்து தப்பினேன். அதன் பின்னர் எனக்கு எதுவும் நினைவில் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers