ஐஎஸ் அமைப்பிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட யாழ்.முஸ்லிம் மக்கள்

Report Print S.P. Thas S.P. Thas in சமூகம்

நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களை கண்டித்தும், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் பின்னர் நாட்டில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், இனங்களுக்கிடையே முறுகல் நிலை ஏற்படும் அபாயம் உருவாகியது.

எனினும், முப்படையினரும் இணைந்து பாதுகாப்பை பலப்படுத்தினர். எனினும், நாட்டில் அசாதாரண சூழ்நிலை நீடித்தது.

இதேவேளை, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் முஸ்லிம் மக்கள் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பிற்கு எதிராக போராட்டங்களை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையிலேயே இன்றைய தினம் யாழ். முஸ்லிம் மக்களும் யாழ்ப்பாணம் புதுப்பள்ளிச் சந்தியில் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

Latest Offers