தீவிரவாதிகள் தொடர்பில் தகவல் கொடுத்த இஸ்லாமியர்களின் நெகிழ்ச்சியான செயல்

Report Print Sujitha Sri in சமூகம்

கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி சாய்ந்தமருதில் தீவிரவாதிகள் தொடர்பில் தகவல் கொடுத்தவர்கள் தமக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சன்மானத்தை வேண்டாமென திருப்பி ஒப்படைத்துள்ள நெகிழ்ச்சி சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி அரச பத்திரிகையொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும்,

தீவிரவாதிகளை காட்டிக் கொடுத்த மூன்று இஸ்லாமியர்களுக்கு தலா பத்து இலட்சம் ரூபா வீதம் சன்மானம் வழங்கப்பட்டது. இதனையே அவர்கள் திருப்பி கொடுத்துள்ளனர்.

இஸ்லாமியர்கள் தீவிரவாதத்தையோ, தீவிரவாதிகளையோ ஒரு போதும் ஆதரிக்கவில்லை என்பதுடன், அவர்கள் தமது தாய் நாட்டிற்கே விசுவாசமாக உள்ளனர்.

இதனை இலங்கை மக்களுக்கும், உலகிற்கும் எடுத்துக்காட்டவே அரசாங்கம் வழங்கிய சன்மானத்தை பெற மறுத்ததாக குறித்த மூவரும் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்தர்பபத்தில் அரசாங்கத்திடம் எமது ஊர் மக்கள் சார்பாக ஒரேயொரு கோரிக்கையை மட்டும் விடுக்க விரும்புகின்றோம்.

அதாவது சாய்ந்தமருது மக்கள் நீண்ட காலமாக தமக்கான உள்ளூராட்சி மன்றமொன்ற கோரி வருகின்றார்கள். இந்த கோரிக்கையை மாத்திரம் நிறைவேற்றி தருமாறு கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.