அரச உத்தியோகத்தர்களுக்கு ஓர் விசேட செய்தி!

Report Print S.P. Thas S.P. Thas in சமூகம்

அரச நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் அணியும் ஆடை தொடர்பில் புதிய சுற்று நிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

பொதுநிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபத்தின்படி,

அரச நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்கள் சாரி அணிவது கட்டாயமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க உத்தியோகத்தர்கள் தமது கடமை நேரத்தில் அலுவலக வளாகத்திற்குள் வரும் போது ஆண் உத்தியோகத்தர்கள் காற்சட்டை மற்றும் மேற்சட்டை அல்லது தேசிய உடை அணிந்திருத்தல் வேண்டும்.

இதேவேளை, பெண் உத்தியோகத்தர்கள் சேலை அல்லது கண்டியச் சேலை (ஒஸரி) அணிந்திருத்தல் வேண்டும் என குறித்த சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Offers