ஹட்டனில் சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டோர் கைது

Report Print Gokulan Gokulan in சமூகம்

ஹட்டன், யுலிபில்ட் தோட்டபகுதியில் சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யுலிபில்ட் பகுதியில் விவசாய பயிர்செய்கை மேற்கொள்ளும் தோட்டத்தில் சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து ஹட்டன் பொலிஸார் இன்று காலை மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 5 சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை சட்டவிரோத மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்தபட்ட மோட்டார் வயர், மோட்டார் சைக்கிள் மற்றும் ஏனைய உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25, 45, 30, 23 இடைப்பட்ட வயதினை கொண்டவர்கள் என தெரிய வந்துள்ளது.

அவர்களை இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers