மூதூர் பிரதேசத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

Report Print Gokulan Gokulan in சமூகம்

திருகோணமலை, மூதூர் பிரதேசத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் தலைமையில் நடைபெற்றுள்ளது.

மூதூர் பிரதேச செயலக மண்டபத்தில் இன்று மாலை இக்கூட்டம் இடம்பெற்றுள்ளது.

அபிவிருத்தி தொடர்பான மீளாய்வு, எதிர்கால அபிவிருத்திகள் உள்ளிட்ட சமூகம் சார்ந்த விடயங்கள் மற்றும் நாட்டின் தற்போதைய அசாதாரண சூழ்நிலைகள் பற்றியும் இங்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கம்பரெலிய, செமட்ட செவன வீடமைப்பு திட்டம் போன்றவை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப், மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் அரூஸ், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயலாளர்கள், அரச உயரதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள், முப்படைகளின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Latest Offers