முசலி பிரதேச செயலாளர் பிரிவில் கிராம சக்தி வேலைத்திட்டம் தொடர்பில் ஆராய்வு

Report Print Ashik in சமூகம்

முசலி பிரதேச செயலாளர் பிரிவில் முன்னெடுக்கப்படவுள்ள கிராம சக்தி வேலைத்திட்டம் தொடர்பாக ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இடம்பெற்றுள்ளது.

முசலி பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்தகுமாரின் ஏற்பாட்டில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான கே. காதர் மஸ்தான் தலைமையில் இன்று முசலி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் 2018ம், 2019ம் ஆண்டுக்கான குறித்த வேலைத்திட்டத்திற்கு அமைவாக 12 கிராமங்களில் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த வேளைத்திட்டத்தை உடனடியாக நடை முறைப்படுத்துவது தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

இதன்போது தெரிவு செய்யப்பட்ட 12 கிராமங்களின் கிராம மட்ட அமைப்புக்களின் தலைவர்கள்,கிராம அலுவலகர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers