தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட இராதாகிருஷ்ணன்

Report Print Thirumal Thirumal in சமூகம்

தலவாக்கலை – ஒலிரூட் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

குறித்த தீ விபத்து காரணமாக லயன் தொகுதியில் அமைந்திருந்த 24 வீடுகள் சேதமடைந்ததுடன், இந்த வீடுகளில் குடியிருந்த 24 குடும்பங்களை சேர்ந்த 103 பேர் நிர்க்கதி நிலைக்குள்ளாகியுள்ளனர். தற்போது இவர்கள் அப்பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களைப் பார்வையிடுவதற்காக அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் ஒலிரூட் தோட்டத்திற்கு இன்று விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சின் ஊடாக பாதிக்கப்பட்ட இம்மக்களுக்கு இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா நிதி ஒதுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிகமாக கூடாரங்களை அமைப்பதற்கு இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Latest Offers