குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதி

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை-விகாரகம பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வீட்டிற்கு பின்னால் உள்ள காட்டுப்பகுதிக்குள் விறகு வெட்டுவதற்காக சென்றபோது வீழ்ந்து கிடந்த மரத்தை வெட்டியதாகவும், குளவிக்கூடு இருந்ததை அவதானிக்காத நிலையில் குளவி கூடு கலைந்து கொட்டியதாகவும் தெரியவருகின்றது.

குளவிக் கொட்டுக்கு இலக்கானவர்கள் திருகோணமலை - விகாரகம பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மூன்று பிள்ளைகள் எனவும் தெரியவந்துள்ளது.

குறித்த ஐந்து பேரும் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.

Latest Offers