எந்த நாடுகளிலும் கிடைக்காத சந்தோசம் இலங்கையில் மாத்திரமே கிடைக்கின்றன!

Report Print Kumar in சமூகம்

நாங்கள் பல நாடுகளுக்கு சென்றபோது கிடைக்காத சந்தோசம் இலங்கைக்கு வரும்போது கிடைப்பதாகவும் அந்த மகிழ்ச்சி இன்றும் காணப்படுவதாகவும் சர்வதேச ரீதியில் பிரபல அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கு அனைவரும் வருகைதந்து இங்குள்ள அழகையும் அன்பான மக்களையும் காணவேண்டும் என சர்வதேச சமூகத்திற்கு சர்வதேச ரீதியில் பிரபல அமைப்புகளின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜெனிவாவில் உள்ள வை.எம்.சீ.ஏ. உலக சம்மேளன செயலாளர் நாயகம் காலோஸ் மஜ்ரி சன்வி, கொங்கொங் இல் உள்ள வை.எம்.சீ.ஏ. களுக்கான ஆசிய பசுபிக் சம்மேளன பொதுச் செயலாளர் நாம் வூ வோன், இலங்கைக்கான தேசிய சபையின் பொதுச் செயலாளர் சாள்ஸ் பிரவுன்சன் ஆகியோர் இதன்போது கருத்துத் தெரிவித்துள்ளனர்.

கடந்த உயிர்த்த ஞாயிறன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற குண்டு தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மற்றும் இறந்தவர்களின் உறவுகளை சந்தித்த வை.எம்.சீ.ஏ. இன் சர்வதேச பிரதிநிதிகள் அதனைத் தொடர்ந்து இன்று மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ. கேட்போர் கூடத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து தமது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

இதன்போது 2019 விஜயம் செய்வதற்கு சிறந்த இடமாக, பயங்கரவாதத்திi வெற்றிபெற விடமாட்டோம் என்னும் சுலோக அட்டைகளை தாங்கி சர்வதேச சமூகத்தினை இங்கு வந்து செல்லுமாறும் அவர்கள் இதன்போது அழைப்பு விடுத்துள்ளனர்.

இதன்போது தொடர்ந்து கருத்துகளை முன்வைத்த பிரதிநிதிகள்,

இந்த நாட்டினை மீள கட்டியெழுப்ப வேண்டுமானால் இளம் சமூகம் முன்வரவேண்டும்.அதற்கான வேலைத்திட்டங்களையே வை.எம்.சீ.ஊடாக நாங்கள் செய்து வருகின்றோம்.

இந்த நாட்டுக்கு நாங்கள் வரும்போது பல்வேறு உணர்வுகள் ஏற்படுகின்றன.இந்த நாடு சிறந்த நாடு,அழகான நாடு.கடந்த 21உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு வலிகளைக்கொண்டவர்களாக உள்ளனர்.

இந்த உலகத்தில் அமைதி ஏற்படவேண்டுமானால் ஒவ்வொரு நாட்டிலும் அமைதியும் சிறந்த சூழ்நிலைகளும் உருவாக்கப்படவேண்டும்.அதற்கான கட்டமைப்புகளை நாடுகள் உருவாக்க வேண்டும்.

விமானத்தில் இருந்து நான் வெளியேறியபோது நான் என்னுடைய தாய் நாட்டுக்கு வந்த ஒரு மனநிறைவு இருந்தது. இங்கு அனைத்தும் பாதுகாப்பாக இருக்கின்றது என்பதை என்னால் உணர முடிந்தது.இங்குள்ள பாதுகாப்பு தரப்பினர் நண்பர்கள்போல் எங்களுடன் பலகினார்கள். விமான நிலையத்தில் எந்தவித சிக்கல்களும் இல்லாமல் எங்களை சிரித்த முகத்துடன் தான் வரவேற்றார்கள் .

நாங்கள் வாரமொருமுறை பல்வேறு நாடுகளுக்கு செல்கின்றேன் அங்கு இங்குள்ளது போன்று சந்தோசத்தை நான் உணர்வதில்லை. ஆனால் இலங்கைக்கு வரும் பொழுது ஒரு என் மனதை சந்தோசம் ஈர்க்கின்றது எனவும் தெரிவித்துள்ளனர்.