மட்டக்களப்பு நகரை பசுமையான நகராக மாற்றும் செயற்றிட்டம்

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பில் வாவிகள் மூடப்படுவது உட்பட பல்வேறு சட்ட விரோத செயற்பாடுகளினால் சுற்றாடலுக்கு கடும் பாதிப்புகள் ஏற்படும் நிலையேற்பட்டுள்ளதாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு நகரின் பசுமையான நகராக மாற்றம் வகையிலான செயற்றிட்டம் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் இன்று மண்முனை வடக்கு டேபா மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

தேசிய சுற்றாடல் வாரம்நேற்றுமுதல் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. அதனை முன்னிட்ட இன்று நாடளாவிய ரீதியில் பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஜனாதிபதியின் எண்ணக்கருவில் முன்னெடுக்கப்படும் இந்த தேசிய சுற்றாடல் வாரம் நிகழ்வில் இம்முறை வளி மாசடைவதை குறைத்தல் என்னும் தொனிப்பொருளில் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தேசிய சுற்றாடல் வாரத்தினையொட்டி மட்டக்களப்பு நகரில் விசேட செயற்றிட்டம் ஒன்றை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி ஆணையாளர் என்.தனஞ்சேயன், மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் சுதர்சன் மற்றும் மாவட்ட சுற்றாடல் திணைக்கள அதிகாரிகள்,அரசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.

Latest Offers