ஊடகவியலாளர் நடேசனை கொலை செய்தவர்கள் யார்? நிலாந்தன்

Report Print Sethu Sethu in சமூகம்

விடுதலைப் புலிகளின் பிளவு மட்டக்களப்பில் வசித்த இரண்டு ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட காரணமாக அமைந்திருந்தது.

அதில் ஒருவர் கொழும்பில் இருந்து செயற்பட்ட ஊடகவியலாளர் சிவராம் மற்றையது மட்டக்களப்பில் இருந்து பணியாற்றிய ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன்.

இருவரும் எந்த மக்களின் விடுதலைக்காக தங்களது ஊடகப் பணியை அர்ப்பணித்தார்களோ தமிழ் மக்களின் விடுதலைக்காக யாருடன் கூடுதலான உறவு வைத்திருந்தார்களோ அவர்களாளேயே இவர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதே கசப்பான உண்மைகள்.

விடுதலைக்கான பயணத்தில் இருந்து விலகியவர்கள் முதலில் பயந்தது துப்பாக்கிகளுக்கு அல்ல தங்களுடன் கூடவே இருந்த பேனாக்களுக்கே.

என்னதான் தங்களது பிளவை நியாயப்படுத்தினாலும் தங்களுடன் தொடர்பில் இருந்த ஊடகவியலாளர்களுக்கு முழுவதும் தெரியும் அவர்கள் உண்மையை எழுத தொடங்கி விட்டார்கள்.

அவர்கள் எமக்கு எதிராக சவால் விட்டு எழுதுகிறார்கள் அவர்களின் எழுத்தி ற்கு பதில் சொல்ல தெரியாத ஒரு படையை நடத்திய தளபதி தங்களது வீரத்தை காட்டிய விதமே ஐயாத்துரை நடேசனின் படுகொலை என அந்த நேரத்தில் பலராலும் குற்றம் சாட்டப்பட்ட விடயம்.

நடேசன் யாருக்காக எழுதினார்? எதற்காக எழுதினார்? அவர் கடைசியாக யாரை குறிவைத்து எழுதினார்? போன்ற வினாக்களுக்கு விடை தேடும் போது அவரை கொலை செய்தவர்கள் யார் என்ற கேள்விக்கு விடை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இன்நிலையில் மட்டக்களப்பில் உள்ள இரண்டு பேர் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டு அது இன்று வரை தொடர்கிறது. கருணா அம்மான் மற்றும் அவருடன் சேர்ந்தியங்கிய பிள்ளையான் ஆகியோரே ஊடகவியலாளர் நடேசனின் படுகொலைக்கு பின்னால் உள்ள சூத்திரதாரிகள் என குற்றச்சாட்டுகள் தொடர்கிறது.

ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களுக்கு இது வரை பகிரங்கமான மறுப்புக்கள் வெளியாகவுமில்லை. குறித்த கொலை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு கொலையாளிகள் கண்டுபிடிக்கப்படவும் இல்லை.

எனவே ஊடகவியலாளர் நடேசனின் கொலை தொடர்பான உண்மைகள் கடந்த 15 வருடங்களாக மறைக்கப்பட்டு வருகின்றது.

குறித்த கொலை தொடர்பான விசாரணைகளை இன்று வரை அரசாங்கம் ஆரம்பிக்க வில்லை நடேசனை கொலை செய்தார் என்று குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்கிற சிவநேச துரை சந்திரகாந்தன் அவர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதை நேரம் ஊடகவியலாளர் நடேசனை கொலை செய்த சம்பவத்தில் பிள்ளையானுக்கு நேரடி தொடர்பு உள்ளதாக மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் சிலர் அந்த நேரத்தில் பகிரங்கமாக குற்றம் சாட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers