செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு!!

Report Print Gokulan Gokulan in சமூகம்

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் சிறப்பு பொங்கல் வழிபாடுகள் இன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து பௌத்த பிக்கு ஒருவர் குருகந்த ரஜமஹா விகாரை எனும் பெயரில் விகாரை ஒன்றை அமைத்துள்ளதுடன் பிரம்மாண்டமான புத்தர் சிலை ஒன்றினையும் அமைத்துள்ளார்.

சர்சைக்குரிய இந்த ஆலயம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இம்மாதம் 6ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்த நிலையில், ஆலயத்துக்கு சென்ற மக்களுக்கு மீண்டும் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

இதனை தொடர்ந்து கிராம மக்கள் இணைந்து பொங்கல் பொங்கி ,மோதகம் அவித்து அபிஷேகம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers