மது போதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸாருக்கு நேர்ந்த கதி

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாணத்தில் மது போதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸார் இருவர் மயங்கி விழுந்துள்ளனர்.

யாழ். பெந்கோஸ்தே தேவாலயத்திற்கு அருகில் இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மதுபோதையிலிருந்த குறித்த பொலிஸார் இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர். இந்த சந்தர்ப்பத்திலேயே அவர்கள் மயங்கி விழுந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதனால் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.