திருகோணமலையில் இனந்தெரியாதோரால் ஹோட்டலுக்கு தீ வைப்பு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலையில் ஹோட்டலொன்றுக்கு இன்று காலை தீ வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அலஸ்தோட்டம் பகுதியிலுள்ள ஹோட்டலொன்றுக்கே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சதாசிவம் குணரத்னம் என்பவருக்கு உரித்தான ஹோட்டலுக்கே இனந்தெரியாதோரினால் தீ வைக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

எனினும் ஹோட்டலுக்கு தீ வைக்கப்பட்டமைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லையென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான தீவிர விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.