அத்துரலிய ரதன தேரருக்கு ஆதரவாக இலங்கையின் மற்றுமொரு இடத்தில் வீதிக்கு இறங்கிய மக்கள்

Report Print Gokulan Gokulan in சமூகம்

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரரின் உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று ஹட்டனிலும் பெருந்திரளான மக்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர்.

இதன்போது ஹட்டன் நீக்ரோ தாறாமே விகாரையின் பிரதான தேரர் மாகம விமலஹிமி தேரர் தலைமையிலான பேரணி விகாரையில் இருந்து ஹட்டன் பேருந்து தரிப்பிடம் நோக்கி சென்றுள்ளது.

அங்கு புத்தபகவானுக்கு விஷேட பூஜைகளை செய்து தேரருடன், மக்களும் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதுடன், ஹட்டன் நகரில் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்போது, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லாஹ் ஆகியேரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும், இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.