வவுனியாவில் - அட்டமஸ்கட பகுதியிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியா - அட்டமஸ்கட பகுதியிலிருந்து வெடிபொருட்கள் சிலவற்றை மீட்டுள்ளதாக மாமடு பொலிஸார் இன்று காலை தெரிவித்துள்ளனர்.

வவுனியா - அட்டமஸ்கட பகுதியிலுள்ள குளத்திற்கு அருகிலுள்ள மரப் பொந்தில் பொதி ஒன்று காணப்படுவதாக நேற்று மாலை கிடைத்த தகவல் அடிப்படையில் சென்ற பொலிஸார் அங்கு காணப்பட்ட பொதியை சோதனை செய்த போது அப் பொதியில் பல வெடிபொருட்கள் காணப்பட்டுள்ளன.

இதன்போது எஸ்.எல்.ஆர் மகசீன் 2, எஸ்.எல்.எல் தோட்டாக்கள் 08, ரி. 56 ரக தோட்டாக்கள் 02, என்பன மீட்கப்பட்டுள்ளன.

அப்பகுதியில் எவ்வாறு குறித்த வெடிபொருட்கள் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ளன, இதை யார் கொண்டு வந்து வைத்துள்ளார்கள் என்பது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இன்றையதினம் நீதிமன்ற அனுமதியுடன் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை செயலிழக்க செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.