பரபரப்பான சூழ்நிலையில் உயர்மட்டத்திலிருந்து ஆட்சியாளர்களுக்கு சென்ற முக்கிய கடிதம்

Report Print Jeslin Jeslin in சமூகம்

மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் பீடாதிபதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு உடனடியாக தீர்வொன்றை வழங்குமாறு தெரிவித்து குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தீவிரவாதிகளுக்கு ஆதரவு வழங்கியதாக முஸ்லிம் அமைச்சர் உள்ளிட்ட ஆளுநர்கள் இருவரைப் பதவி விலக்குமாறு கோரி இன்றுடன் நான்காவது நாளாக அத்துலியே ரதன தேரர் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

இந்நிலையில், குறித்த விவகாரம் நாட்டில் பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளதால், இந்த புனித பூமியின் கௌரவத்தை மதித்து, புனிதத்துவத்தை பாதுகாத்து உடனடியாக தீர்வொன்றை வழங்குமாறு குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.