முல்லைத்தீவு மாவட்டத்தில் 13,643 குடும்பங்களுக்கு சமுர்த்தி கொடுப்பனவு

Report Print Gokulan Gokulan in சமூகம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்டகாலமாக சமுர்த்தி கொடுப்பனவு வழங்கப்படாமல் இருந்த மக்களுக்கு சமுர்த்தி கொடுப்பனவு வழங்கி வைக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி திட்ட பணிப்பாளர் க.ஜெயபவானி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும்தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் 3,697 குடும்பங்களுக்கும், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 6,011 குடும்பங்களுக்கும், மாந்தை கிழக்கு பிரதேசத்தில் 657 குடும்பங்களுக்கும், துணுக்காய் பிரதேசத்தில் 642 குடும்பங்களுக்கும், ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 1758 குடும்பங்களுக்கும், வெலிஓயா பிரதேசத்தில் 878 குடும்பங்களும் என முல்லைத்தீவு மாவட்டத்தில் மொத்தமாக 13,643 குடும்பங்களுக்கான சமுர்த்தி திட்ட அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கான நிகழ்வு எதிர்வரும் 08ஆம் திகதி முல்லைத்தீவில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள நாட்டுக்காக ஒன்றிணைவோம் வேலைத்திட்ட நிகழ்வில் வழங்கி வைக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.