ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலியின் இராஜினாமாவை வெடி கொளுத்தி கொண்டாடிய கந்தளாய் மக்கள்

Report Print Mubarak in சமூகம்

கந்தளாய் பிரதேசத்தில் பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் இரண்டு ஆளுநர்கள் பதவி துறந்ததையடுத்து சந்தோச வெள்ளத்தில் பட்டாசு கொளுத்தி மகிழ்சியில் கந்தளாய் மக்கள் கொண்டாடினர்.

கிழக்கு மற்றும் மேல் மாகாண ஆளுநர்கள் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத்சாலி ஆகியோர் இராஜினாமா செய்ததையடுத்து கந்தளாய் வர்த்தக சங்கத்தினர், சிவில் சமூகம் மற்றும் பல பொது அமைப்புகளும் இணைந்து கந்தளாய் நகரில் பட்டாசு கொளுத்தி ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.

இதில் பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டு வீதியில் நின்று வான வெடிகளை இட்டு கொண்டாடினர்.