15 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் ஓர் முக்கிய அறிவிப்பு : வருட இறுதிக்குள் நடைமுறைக்கு வரவுள்ள திட்டம்

Report Print Satha in சமூகம்

இலத்திரனியல் முறையிலான தேசிய அடையாள அட்டைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ் வருட இறுதிக்குள் குறித்த இலத்திரனியல் முறையிலான தேசிய அடையாள அட்டைகள் வெளியிடப்படும் என ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், இதில் கைவிரல் அடையாளத்தை உள்ளடக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

15 வயதுக்கு மேற்பட்ட சகலரும், இலத்திரனியல் அடையாள அட்டைகளை பெற வேண்டும் என, ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers