முல்லைத்தீவில் இரண்டாம் நாள் வேலைத்திட்டம் ஆரம்பம்

Report Print Gokulan Gokulan in சமூகம்

ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைய ஜனாதிபதி அலுவலகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நாட்டிற்காக ஒன்றிணைவோம் எனும் நிகழ்ச்சி திட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் இந்நிகழ்ச்சி திட்டத்தை நேற்று ஆரம்பித்து வைத்துள்ளார்.

இதனடிப்படையில் இரண்டாம்நாளான இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் நகரப்பகுதியில் உள்ள பேருந்து தரிப்பிடம் மற்றும் அதனோடு இணைந்த சின்ன ஆற்றுப்பகுதி சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஆறு பிரதேச செயலகங்களின் கீழும் 335 நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Latest Offers