ரிசாத், ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலிக்கு எதிராக இன்று மீண்டும் வீதிக்கு இறங்கிய தேரர்கள்

Report Print Vethu Vethu in சமூகம்

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன், முன்னாள் ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலிக்கு எதிராக இன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பொல்கஹவெல நகரத்தில் இன்று அனைத்து கடைகளும் மூடப்பட்டு தேரர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.

பயங்கரவாதத்தை பரப்புவதற்காக ஆதரவு வழங்கிய அரசியல்வாதிகள் தங்கள் பதவியிலிருந்த விலகினால் போதாதென குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்களுக்கு எதிராக சட்டத்தை செயற்படுத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மஹா சங்கரத்தினர், வர்த்தக சங்கத்தினர் உட்பட பலரால் இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்ட நெருக்கடியான நிலையை அடுத்து அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ், ரிசாத் பதியுதின் ஆகியோகர் தமது பதவியை ராஜினாமா செய்திருந்தனர்.

இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் பதவி விலகியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers