பாடசாலைக்கு கடும் அச்சத்துடன் செல்லும் வவுனியா மாணவர்கள்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா, பூந்தோட்டம் மகா வித்தியாலய பாடசாலைக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதினால் மாணவர்கள் அச்சத்துடன் பாடசாலைக்கு சென்று வருவதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலையடுத்து பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருடைய பாதுகாப்புடன் மாணவர்கள் சோதனை செய்யப்பட்ட பின் பாடசாலைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர். தற்போதும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகின்றது.

ஆனால், பூந்தோட்டம் மகா வித்தியாலயத்தில் சுமார் 700 வரையிலான மாணவர்கள் கல்வி கற்கும் நிலையில் கடந்த ஒரு வாரமாக பாடசாலைக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பாடசாலை மாணவர்களின் பெற்றோர், இன்னும் நாட்டின் இயல்பு நிலை முழுமையாக திரும்பாத நிலையில் பொலிஸ் பாதுகாப்பு நீக்கப்பட்டமையால் மாணவர்கள் அச்சத்துடனேயே பாடசாலைக்கு சென்று கற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் பாதுகாப்பு தரப்பு கவனம் செலுத்தி மாணவர்களின் பாதுகாப்பையும், பதற்றமற்ற கற்றல் செயற்பாடுகளையும் உறுதிப்படுத்த வேண்டும் என கோரியுள்ளனர்.

Latest Offers