புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடி கட்டிடம் இராதாகிருஸ்ணனால் திறந்து வைப்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

ஹட்டன் கல்விவலயத்திற்குட்பட்ட கினிகத்தேன மத்திய மாகாவித்தியாலயத்தில் கல்வி அமைச்சின் 38மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடி கட்டிடம் பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த திறப்பு விழா இன்று இடம்பெற்றுள்ளது.

இதேவேளை இலங்கை அரசாங்க சபையின் முதல் கல்வி அமைச்சரான C.W.W கன்னங்கராவின் உருவசிலை அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணனால் திறைநீக்கம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வித்தியாலயத்தின் அதிபர் உப்புல் இந்திரஜித் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் அயல் பாடசாலையின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதிய அரசாங்கத்தின் ஊடாக இந்த கட்டிடத்திற்கு நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதோடு குறித்த பாடசாலையில் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துரலிய ரத்ன தேரருடைய உணவு தவிர்ப்பு போராட்டம் இந்நாட்டில் ஒரு பிரிவினையை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரரினால் மேற்கொண்ட உணவு தவிர்ப்பு போராட்டமானது அவரை பொருத்தவரையில் வெற்றியளித்து இருந்தாலும் இந்நாட்டில் ஒரு பிரிவினையை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லிம் அமைச்சர்கள் ஒன்றினைந்து அவர்களுடைய அமைச்சு பதவியினை இராஜினாமா செய்து இருக்கிறார்கள். இந்த சம்பவம் ஒற்றுமையை எடுத்து காட்டி இருக்கிறது.

மலையகத்தில் உள்ள அமைச்சர்கள் மத்தியில் இருந்து இருந்தால் தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த வேதனம் ஆயிரம் ரூபாயினை நாம் பெற்று கொடுத்திருக்கலாம்.

மலையகத்தில் இவ்வாறான ஒற்றுமை இல்லாததன் காரணமாகத்தான் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தினை பெற்று கொடுக்கமுடியாமல் போய்விட்டது.

கட்சியில் பல பிரிவினைகள் மாற்று கட்சியினுடைய போர் கொடிகள் இடம்பெற்ற சம்பவங்களினால் ஒற்றுமையை ஏற்படுத்த முடியாமல் போனது குறித்து நான் பெரிதும் மனவருத்தம் அடைகின்றேன்.

அதேபோல் வடகிழக்கில் உள்ள அரசியல்வாதிகளின் ஒற்றுமை இல்லாத காரணத்தால் அவர்களுக்குள்ளே பின்னடைவை ஏற்படுத்தி இருந்தது.

இவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து இருந்தால் இந்த நாட்டில் உள்ள அதிகார பகிர்வு எப்பொழுதே கிடைத்திருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers