யாழில் மீன்பிடிக்கச் சென்ற இருவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு

Report Print Sumi in சமூகம்

யாழ். காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற இரு இளைஞர்களைக் காணவில்லை என ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடு இன்று ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் பெற்றோர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காரைநகர் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய கோடிஸ்வரன் குப்பிரியன் மற்றும் 26 வயதுடைய தவராசா சத்தியராஜ் ஆகிய இருவருமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

காரைநகர் வடக்கு கடற்பரப்பில் நேற்று முன்தினம் மதியம் 3.30 மணியளவில் மீன்பிடிப்பதற்காகச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் கடலிற்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களும் அவர்களை தேடியுள்ளனர்.

இதேவேளை குறித்த இருவரும் இன்று வரை வீடு திரும்பவில்லை.

அதேவேளை, கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை மற்றும் மீன்பிடி அமைச்சிலும் மீனவர்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Latest Offers