வவுனியாவில் கடும் வரட்சி: வீதிக்கு வந்த உயிரினம்

Report Print Theesan in சமூகம்

வவுனியா - மடுகந்தை, அம்பலாங்கொட பகுதியில் இன்று காலை முதலை ஒன்று வீதிக்கு வந்ததன் காரணமாக அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

முதலை வீதியோரத்தில் இருந்த சிறிய பற்றைக்குள் புகுந்து அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதினால் பொதுமக்கள் பதற்றமடைந்ததோடு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த மடுகந்தை பொலிஸார், வவுனியா வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளை வரவழைத்து முதலையை மீட்டு பாதுகாப்பான இடத்தில் விடுவதற்காக எடுத்துச் சென்றுள்ளனர்.

7 அடி நீளமான முதலையானது, தச்சன்குளத்தில் இருந்து நீர்நிலை தேடி ஊருக்குள் வந்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மைக்காலமாக வவுனியாவில் நிலவிவரும் கடும் வரட்சி காரணமாக குளங்களில் உள்ள நீர் வற்றிக் காணப்படுவதினால் உயிரினங்கள் வீதிக்கு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers