வீதியை குறுக்கிட்ட புலியால் இளைஞர்களுக்கு நேர்ந்த கதி

Report Print Rusath in சமூகம்

மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

கரடியனாறு, பதுளை வீதி கொடுவாமடுவில் நேற்றிரவு இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென சருகுபுலி ஒன்று வீதியைக் கடக்க முற்பட்டுள்ளது.

வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் சருகுபுலியை மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனால் இளைஞர்கள் இருவரும் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததோடு, புலியும் இறந்து கிடந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

செங்கலடி, கணபதி நகரைச் சேர்ந்த 19 வயதுடைய பேரின்பராசா ஜெயரூபன், 20 வயதுடைய கௌரீஸ்வரன் விதுஷ‪ன் ஆகியோரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Latest Offers