கத்தோலிக்கர் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும்

Report Print Steephen Steephen in சமூகம்

இலங்கையில் உள்ள 9 ஆளுநர் பதவிகளில் ஒரு ஆளுநர் பதவியை கத்தோலிக்கர் ஒருவருக்கு பெற்றுக்கொள்வது தொடர்பில் கத்தோலிக்க திருச்சபை கவனம் செலுத்தியுள்ளது.

நாட்டில் உள்ள 9 மாகாணங்களில் எந்த மாகாணத்திலும் கத்தோலிக்கர் ஒருவர் ஆளுநராக பதவி வகிக்கவில்லை. இது சம்பந்தமாக கத்தோலிக்க ஆயர்கள் சபை கலந்துரையாடியுள்ளது.

கத்தோலிக்கர் ஒருவர் ஏதாவது ஒரு மாகாணத்தில் ஆளுநராக பதவி வகித்திருந்தால், அண்மையில் கத்தோலிக்க மக்கள் எதிர்நோக்கி அனர்த்தம் தொடர்பாக விசேட கவனம் செலுத்தி, பிரயோசனப்படுத்தியிருக்கலாம்.

நல்லிணக்கம் மற்றும் ஐக்கியம் பற்றி தொடர்ந்தும் பேசும் ஜனாதிபதியும் அரசாங்கமும் கத்தோலிக்கர்களை ஒதுக்கி வைத்துள்ளமை குறித்து கத்தோலிக்க திருச்சபை கவலை வெளியிட்டுள்ளது.

இம்முறை ஆளுநர்கள் நியமிக்கப்படும் போது, கத்தோலிக்கர் ஒருவர் நியமிக்கப்படுவார் என நம்பிக்கை இருப்பதாக பேராயரின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers