திருகோணமலை கந்தளாயில் விபத்து: இருவர் வைத்தியசாலையில்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை, கந்தளாய் பகுதியில் இன்று மோட்டார் சைக்கிள் ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வேகமாகச் சென்ற இருவர் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல், மின் கம்பத்தில் மோதியுள்ளனர்.

இவ்விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான இருவர் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கந்தளாய், அக்போபுர பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய சாந்த குமார மற்றும் 19 வயதுடைய நிரோசன் ஆகியோரே இவ்வாறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers