மன்னார் தாழ்வுபாடு பகுதியில் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ள பொதிகள்

Report Print Ashik in சமூகம்

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட திடீர் சோதனைகளின் போது 33 பொதிகளைக் கொண்ட 526 கிலோ கிராம் எடை கொண்ட பீடி சுற்றும் இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.

தாழ்வுப்பாட்டு கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையிலே குறித்த பீடி சுற்றும் இலைகளைக் கொண்ட பொதிகள் கடற்படையினரினால் மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது தோட்டவெளி மற்றும் எருக்கலம்பிட்டி பகுதிகளைச் சேர்ந்த சந்தேக நபர்கள் இருவரும் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும், கைப்பற்றப்பட்ட பீடி இலைப் பொதிகளும் யாழ். சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரனைகளை யாழ். சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers