அடிப்படைவாதத்திற்கு எதிரான போராட்டத்தை இனவாதமாக மாற்றி விட்டனர் - எஸ்.பி. திஸாநாயக்க

Report Print Steephen Steephen in சமூகம்

அடிப்படைவாத மிலேச்சத்தனமானவர்களின் ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் பௌத்த பிக்குகள், புத்திஜீவிகள் மற்றும் மக்கள் அடிப்படைவாதிகளுக்கு எதிராக முன்னெடுத்த போராட்டத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ரவூப் ஹக்கீம், கபீர் ஹாசிம் ஆகியோர் கலந்துரையாடி அரசாங்கத்தின் பதவிகளில் இருந்து விலகியதன் மூலம் அதனை முஸ்லிம் இனவாத பிரச்சினையாக காட்டியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுப்படுத்தும் நோக்கில் தனது அலுவலகத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கத்தோலிக்க, பௌத்த சிங்கள மற்றும் இந்து மக்களிடம் இருந்து முஸ்லிம் மக்களை பிரிப்பதற்காகவே அடிப்படைவாதத்திற்கு எதிரான போராட்டத்துடன் இனவாதத்தை திணித்துள்ளனர்.

இந்த மிகப் பெரிய தவறுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ரவூப் ஹக்கீம், கபீர் ஹாசிம் ஆகியோர் பொறுப்புக் கூற வேண்டும். அனைத்து முஸ்லிம் அமைச்சர்கள் விலகியதன் மூலம் அரசாங்கத்திற்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த அடிப்படைவாத பயங்கரவாத தாக்குதலின் பின்னர், அரசாங்கமும் அரசியல் கட்சியும் பிரதான பௌத்த மக்கள், கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மக்கள் இந்த கொடூர தாக்குதலை முஸ்லிமகள் மீது சுமத்த பெரிய முயற்சிகளை எடுத்தனர்.

இதனால், அடிப்படைவாதிகளுக்கு பாதுகாப்பு கொடுத்து, அவர்களிடம் இருந்து பெரியளவில் நிதியை பெற்றுக்கொண்டு, அவர்களுடன் தொடர்பு வைத்திருந்த சில அரசியல்வாதிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் சம்பிரதாய முஸ்லிம் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers