செம்மலை பகுதியில் மூன்று வாடிகள் தீயில் எரிந்து நாசம்

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு - செம்மலை முதலாம் குறுக்குத்தெரு வீதி கடற்கரையில் இனந்தெரியாத நபர்களால் வாடிகள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக மூன்று வாடிகள் முற்றாக எரிந்து சம்பலாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதனால் செம்மலை பகுதி மீனவர் ஒருவரின் வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதி மீனவர்கள் 20 பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த தீ அனர்த்தத்தின் போது ஒரு கரைவலை, இரண்டு படகு இயந்திரங்கள், 10 மடிவலைகளும் முற்றாக எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு பாதிக்கப்பட்ட மீனவரினால் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers