தௌஹீத் ஜமாத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட பொறியியலாளருக்கு விளக்கமறியல்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

தௌஹீத் ஜமாத்துடன் தொடர்புடைய தெஹிவளையில் கைது செய்யப்பட்ட பொறியியலாளரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கெப்பித்திகொல்லாவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கெப்பித்திகொல்லாவ நீதவான் மாலிந்த ஹர்ஷன த அல்விஸ் முன்னிலையில் இன்று சந்தேக நபரை ஆஜர்படுத்திய போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த முதலாம் திகதி தௌஹீத் ஜமாத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டு வந்த பொறியியலாளர் ஹொரவ்பொத்தான பொலிஸாரினால் தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது 72 மணித்தியாலங்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வந்த சந்தேக நபரை நீதிமன்றில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கெப்பித்திகொல்லாவ நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டது.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் தெஹிவளை-கவுதான வீதியைச் சேர்ந்த சஹீட் முகம்மது நசுருதீன் (53 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தௌஹீத் ஜமாத்துடன் தொடர்புடைய இவர் கெப்பித்திகொல்லாவ மற்றும் ஹொரவ்பத்தான பிரதேசங்களுக்கு பள்ளிவாயல்களை நிர்மானிப்பதற்கு நீதி வழங்கியவர் எனவும், கடந்த பத்து வருட காலமாக சவூதி அரேபியாவில் பொறியியலாளராக கடமையாற்றி வந்துள்ளார் எனவும்,பள்ளிவாயல் நிர்மாணிப்பதற்கு நிதியுதவி வழங்கி வந்துள்ளமையும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

Latest Offers