தெரிவுக்குழுவின் விசாரணைகள் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாது - சரத் பொன்சேகா

Report Print Kanmani in சமூகம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகள் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்தவிதத்திலும் அச்சுறுத்தலாக அமையாது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத குண்டுத் தாக்குதல்கள் குறித்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் இரண்டாம் விசாரணை இன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதன்போது பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக .டி.சில்வா சாட்சியமளித்துள்ளார்.

மேலும் கடந்த முதலாவது அமர்வில் இருந்து புலனாய்வு பிரிவினரின் தகவல்கள் இந்த விசாரணை மூலம் வெளிவருவதாகவும் இதனால் தேசிய பாதுகாப்பிற்கும் புலனாய்வு துறையினருக்கும் ஆபத்து என மஹிந்த ராஜபக்ஷ உட்பட எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers