தீவகப் பகுதிகள் தொடர்பில் புலம்பெயர் உறவுகளுக்காக விடுக்கப்படும் தகவல்...!

Report Print S.P. Thas S.P. Thas in சமூகம்

வடக்கின் முக்கியமான பகுதியாக காணப்படும் தீவகப் பகுதியில் தற்போது கடும் வரட்சியான நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இதனால் கால் நடைகள் அழிந்து போகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

காலநிலையில் ஏற்பட்ட மாற்றங்களால் கடுமையான வரட்சியினை வட பகுதி எதிர் கொண்டிருக்கிறது. அதிலும் தீவகப்பகுதியில் வரட்சி மிகமோசமாக பாதிப்புக்களை ஏற்படுத்தியிருக்கின்றன.

தண்ணீருக்கான தட்டுப்பாடு அதிகரித்திருப்பதால், செடி கொடிகள் கருகிப் போயிருக்கின்றன. அத்தோடு நீரின்றி கால்நடைகள் உயிரிழந்து போவதாகவும் பொது மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் கால் நடைகளுக்காக ஏற்கனவே தொட்டிகள் பல கட்டிவிடப்பட்டிருக்கின்றன. ஆனால், அத் தொட்டிகளில் நீர் நிரப்பி கால்நடைகளின் தாகத்தை போக்குவதற்கான எந்த வசதிகளையும் எவரும் முன்வந்து செய்யவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

எனவே இது தொடர்பில் முன்வந்து செயற்பட விரும்புபவர்கள் தங்கள் உதவியினைச் செய்து அழிவுறும் தருவாயில் இருக்கும் விலங்குகளின் உயிரைக்காப்பாற்ற முன்வர வேண்டும் என தீவக மக்கள் கோரிக்கை விடுக்கின்றார்கள்.

Latest Offers