நுவரெலியா தேசிய மீன் வளர்ப்பு அபிவிருத்தி காரியாலயத்தின் கீழ் இயங்கும் நிலையத்தின் ஊடாக இன்று 75 ஆயிரம் மீன் குஞ்சுகள் காசல் ரீ நீர் தேக்கத்தில் விடுவிக்கப்பட்டுள்ளன.
இந்த மீன் குஞ்சுகளானது மலையகத்தில் போஷாக்கு குறைவின்றி காணப்படும் மக்களுக்கு போஷாக்கினை அதிகரிக்கவே மீன் குஞ்சுகள் காசல் ரீ நீர் தேக்கத்தில் விடப்பட்டுள்ளன.
குறித்த மீன் குஞ்சுகள் உடவலவ தேசிய மீன் வளர்ப்பு அபிவிருத்தி திணைக்களத்தில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதெனவும், இரண்டு மாத காலபகுதியில் விற்பனை செய்யமுடியும் என நுவரெலியா நன்னீர் மீன்வளர்ப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.