மங்கள சமரவீர, ராஜித சேனாரட்ன மற்றும் சத்துர சேனாரத்ன ஆகியோர் விகாரைக்கு வர தடை விதிப்பு

Report Print Murali Murali in சமூகம்

அமைச்சர்களான மங்கள சமரவீர, ராஜித சேனாரட்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்ன ஆகியோருக்கு கம்பஹா பிரதேசத்திலுள்ள எந்தவொரு விகாரையிலும் வழிபாட்டில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கம்பஹா சாசன பாதுகாப்பு சபையின் விகாராதிபதி சங்கத்தினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா சாம விகாரையில் இன்று நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த மூவரும் கம்பஹா பிரதேசத்திலுள்ள எந்தவொரு விகாரையிலும் வழிபாட்டில் ஈடுபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டில் அனைத்து தரப்பினர்களும் ஒற்றுமையுடன் ஏற்றுக் கொள்ள கூடிய நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய பொதுவான சட்ட திட்டங்கள் பலவற்றை நாட்டில் செயற்படுத்த தேவையான நடைமுறைகள் குறித்து இக்கூட்டத்தின் போது ஆராயப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்படுகின்றது.

Latest Offers