சட்டவிரோத செயலில் ஈடுபட்ட ஒருவருக்கு அபராதம்

Report Print Mubarak in சமூகம்

சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபரொருவருக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்திய போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் கைப்பற்றப்பட்ட கசிப்பு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் பொருட்களை அரசுடமையாக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை - குச்சவெளி பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவரிடமிருந்து கோடா, செப்புக்கம்பி, சுருள்கள், வாயு அடுப்பு, வாயு சிலிண்டர் மூன்று உள்ளிட்ட இன்னும் சில உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers