முஸ்லிம்கள் அனைவருக்கும் சதிகாரர்களிடமிருந்து பாதுகாப்பும் கிடைக்க வேண்டும்!

Report Print Navoj in சமூகம்

நோன்புப் பெருநாளை கொண்டாடும் முஸ்லிம்கள் அனைவருக்கும் மன நிம்மதியும் சதிகாரர்களிடமிருந்து பாதுகாப்பும் கிடைக்க வேண்டும் என்று எல்லாம்வல்ல இறைனை பிரார்த்திப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.

மேலும் தனது நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த செய்தியில்,

புனிதமிகு ரமழான் மாதத்தில் முஸ்லிம்களாகிய நாம் பேணிவந்த நற்பண்புகளையும், நற்செயல்களையும், இறை அச்சத்தையும் இந்த பெருநாள் தினத்திலும் கடைப்பிடிப்பது எமது கட்டாயமாகும்.

இன்று இலங்கை முஸ்லிம்கள் சதிகாரர்களதும் சூழ்ச்சிக்காரர்களதும் செயற்பாட்டினால் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் அச்சத்தடன் தங்களது ஒவ்வொரு பொழுதுகளையும் கழித்து வருகிறார்கள்.

இச்சந்தர்ப்பத்தில் மற்ற மதத்தை சேர்ந்தவர்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தாத வகையில் தங்களது பெருநாளை கொண்டாடுவது எம் ஒவ்வொருவருக்கும் கட்டாயமாகும்.

எமது நாட்டை எப்பொழுதும் முஸ்லிம்கள் நேசித்தவர்கள் என்ற வரலாறு இருந்து வந்துள்ளது. அதனை இல்லாமல் செய்வதற்காக சர்வதேச பயங்கரவாதிகளான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் முஸ்லிம் பெயர்களை தாங்கிய தற்கொலைதாரிகளை பயன்படுத்தி இலங்கையில் முஸ்லிம்களுக்கு இருந்து வந்த நற்பெயரை கெடுக்க சதிசெய்துள்ளது.

இதனை புரிந்து கொள்ளாத சிலர் எம் மத்தியில் இன வன்முறைகளை செய்து வருவதுடன் எம்மில் பிழைகாண்பதிலும் கண்னும் கருத்துமாக இருந்து வருகின்றனர்.

இதனால் முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் மிகவும் விழிப்புடனும் நிதானத்துடனும் இச்சந்தர்ப்பத்தில் செயற்படவேண்டிய கட்டாயம் இருக்கின்றது.

நோன்பு பெருநாளில் நாம் அனைவரும் நாட்டில் ஏற்பட்டுள்ள பதட்ட நிலை நீங்கவும் சகோதர சமூகம் எம் மீது கொண்டுள்ள பகைமை நீங்கி நாட்டில் அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடன் வாழ்வதற்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனை இச்சந்தர்ப்பத்தில் பிரார்த்திக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers