வவுனியாவில் 250 மரக்கன்றுகள் நாட்டப்பட்டன

Report Print Theesan in சமூகம்

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய வடக்கில் 1000 மரக்கன்றுகளை நாட்டும் திட்டத்தின் ஓர் பிரிவாக வவுனியாவில் இன்று 250 மரக்கன்றுகள் நாட்டப்பட்டுள்ளன.

வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வனவள திணைக்களம், விவசாய திணைக்களம் மற்றும் சுற்றாடல் அபிவிருத்தி அதிகாரசபை என்பவற்றின் ஏற்பாட்டில் மரக்கன்றுகளை நாட்டும் திட்டத்திற்கான நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தலைமையில் வவுனியா விவசாய பண்ணைக்கு முன்பாக ஆரம்பமாகியிருந்தது.

இதில் பிரதேச செயலளார் கா.உயராசா, உள்ளூராட்சி உதவி ஆணையாளர் காஞ்சன குமார, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், இராணுவத்தின் 56 படைப்பிரிவு அதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள், விவசாய திணைக்களத்தின் அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், கிராம சேவகர்கள், பொலிஸார் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers