கட்டுநாயக்க வந்த இந்திய பிரதமர்! அருகில் பயணித்த மற்றுமொரு விமானத்தால் குழப்பம்

Report Print Vethu Vethu in சமூகம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.

பிரதமர் இன்று காலை 11.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவரது விமானத்திற்கு அருகில் அவர் பயணித்ததனை போன்று மற்றுமொரு விமானம் பயணித்துள்ளது.

அந்த விமானம் தொடர்பில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதன்போது இந்திய பிரதமரின் பாதுகாப்பிற்காக இந்த விமானம் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்திய பிரதமர் தலைமையில் 59 பேர் அடங்கிய குழுவினர் இலங்கை வந்தடைந்துள்ளனர்.

அவர்களில் 16 பேர் இரண்டு விமானங்களின் ஊழியர் குழுவினர் என குறிப்பிடப்படுகின்றது.

Latest Offers