வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் மன்னாரிற்கு திடீர் விஜயம்

Report Print Ashik in சமூகம்

புதிதாக பதிவியேற்றுள்ள வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி விஜய குணவர்த்தன இன்று மதியம் மன்னாரிற்கு திடீர் விஜயம் செய்துள்ளார்.

மன்னாரிற்கு வருகை தந்த வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி விஜய குணவர்த்தன, மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இடம் பெற்ற அணி வகுப்பு நிகழ்விலும் கலந்து கொண்டார்.

மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க தலைமையில் குறித்த அணிவகுப்பு மரியாதை இடம் பெற்றது.

அதனைத்தொடர்ந்து மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் மரக்கன்று ஒன்றை நாட்டி வைத்தார்.

பின்னர் மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளையும் சந்தித்து உரையாடியுள்ளதோடு, மன்னாரில் உள்ள ஒவ்வொரு பொலிஸ் பிரிவுகளின் நிலைமைகளை கேட்டு அறிந்து கொண்டார்.

வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபராக ரவி விஜயகுணவர்த்தன நியமிக்கப்பட்ட நிலையில் மன்னார் மாவட்டத்திற்கான முதல் விஜயம் என்பதும் குறிப்பிடத்தக்கது.