முச்சக்கரவண்டி விபத்தில் இரு பெண்கள் பலி: நால்வர் காயம்

Report Print Ajith Ajith in சமூகம்

இராவணா எல்ல, வெள்ளவாய வீதி பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலியாகியுள்ளதுடன், நால்வர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது முச்சக்கரவண்டி பள்ளத்தில் விழுந்துள்ளது.

36, 38 வயதுகளை கொண்ட இரண்டு பெண்களே விபத்தில் பலியாகியுள்ளதுடன், காயமடைந்த நால்வரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.