மட்டக்களப்பு வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டம்

Report Print Rusath in சமூகம்

சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சின், ஆரம்ப சுகாதார பராமரிப்பு சேவைகள் முறைமையை வலுவூட்டும் திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கென மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலை மற்றும் கல்லாறு வைத்தியசாலை ஆகியவை தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், எமது சக்தியினூடாக எமது ஆரோக்கியம் - சுகாதார மேம்பாட்டிற்கு பங்களிப்போம் எனும் தொனிப்பொருளிலான பதாதை நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இவ்வைத்தியசாலையில் மின் சுகாதார அட்டை வழங்குதல் திட்டம் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், குறித்த திட்டச் செயற்பாடுகள் மிக விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த பதாதை மகிழடித்தீவு வைத்தியசாலை வைத்திய அதிகாரி ரி.தவனேசன் தலைமையில், பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வி.பிறேமானந், திட்டமிடல் வைத்தியர் கஸ்தூரி குகன், நிர்வாக உத்தியோகத்தர் நித்தியாரஜணி, மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.