அதிகளவான போதைப்பொருள்களுடன் பொகவந்தலாவையில் ஒருவர் கைது

Report Print Gokulan Gokulan in சமூகம்

பொகவந்தலாவ, கிளானி தோட்டபகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து போதை பொருள் என சொல்லபடும் 75 என்.சி டின்களுடன் சந்தேக நபர் ஒருவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவின் போதை பொருளை ஒழிப்போம் எனும் வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த புகையிலை தூள் அடைக்கப்பட்ட என்.சி டின் ஒன்று தோட்டமக்களுக்கு 250ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடடத்தக்கது.