வவுனியா மின்சாரசபையால் மின்குமிழ் விநியோகித்தல் செயற்திட்டம் முன்னெடுப்பு

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா பிரதேச மின்சாரசபையால் எல்.ஈ.டி மின்குமிழ் விநியோகிக்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு உள்ளதாக பிரதேச பிரதம மின்பொறியிலாளர் தெரிவித்துள்ளார்.

இந்த செயற்திட்டம் குறித்து இன்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்படி விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

மின்சக்தி கேள்வி முகாமைத்துவம் பற்றிய ஜனாதிபதி செயலணியின் ஏற்பாட்டில், இலங்கை மின்சார சபை, வரையறுக்கப்பட்ட இலங்கை மின்சார நிறுவனம், இலங்கை மின்மாற்றிகள் நிறுவனம் மற்றும் இலங்கை நிலைபெறுதல் வலு அதிகாரசபை என்பவற்றின் அணுசரனையுடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

10,000 மணித்தியாலங்களுக்கு மேற்பட்ட பாவனைக்காலம் கொண்ட 85 சதவீதம் மின்சாரத்தை சேமிக்க கூடிய, இரசாயன சேர்க்கை கொண்டிராத, சூழலுக்கு உகந்ததான, மின்சார சேமிப்பும், சக்தி வினைத்திறன் கொண்ட எல்.ஈ.டி மின்குமிழ்களை தெரிவு செய்யப்பட்ட மின் நுகர்வோர், மின்சார சபையில் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

மின்பட்டியலின் மேற்பகுதியில் 2 எல்.ஈ.டி மின்குமிழ் என குறிப்பிடப்பட்டிருப்பின் உங்கள் அடையாள அட்டையுடன் 2019ஆம் ஆண்டு மே மாதத்திற்குரிய உங்களின் மின்பட்டியலையும் எடுத்து சென்று எதிர்வரும் 12, 13 மற்றும் 14ஆம் திகதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரையிலும் வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள பிரதேச மின்சார சபை காரியாலயம், மடு பிரதேச மடு நுகர்வோர் சேவை நிலையம் என்பவற்றில் தங்களுக்குரிய எல்.ஈ.டி மின்குமிழ்களை பெற்று கொள்ள முடியும் என வவுனியா பிரதேச மின்சார சபை காரியாலயம் அறிவித்துள்ளது.